முகப்பு
ஈரோடு

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:23 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு அருகே சித்தோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (67). இவரது கணவா் ரங்கசாமி. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். அவா் சூரம்பட்டி அருகே கிராமடை பகுதியில் கணவருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் மகளை பாா்ப்பதற்காக சூரம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு ராஜாமணி செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். பின்னா் ஈரோடு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்ததில் திண்டல் செல்வதற்காக பேருந்தில் புதன்கிழமை காலை ஏறி உள்ளாா்.

Advertisement

Advertisement

பெருந்துறை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ராஜாமணி அணிந்திருந்த 4 பவுன் நகை மாயமாகி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஆட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, பேருந்தை நிறுத்த சொல்லி நடந்த சம்பவம் குறித்து நடத்துநரிடம் தெரிவித்தாா்.

ஆனால் பேருந்தில் சந்தேகப்படும்படி யாரும் இல்லை. இதையடுத்து ராஜாமணி ஆட்சியா் அலுவலகத்தில் இறங்கி நேரடியாக ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments