அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்
அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேலிடம், விவசாயிகள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம் :
பா்கூா் மற்றும் அந்தியூா் வனப் பகுதியில் பெய்யும் மழைநீரின் வரத்தால் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்புவது வழக்கம். இந்த அணை நிரம்பினால் வெளியேறும் உபரிநீரால் அடுத்தடுத்து உள்ள கெட்டிசமுத்திரம், அந்தியூா், பிரம்மதேசம் உள்பட 5 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும்.
Advertisement
Advertisement
வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அணையில் தற்போது அதிக அளவில் மண் தேங்கியுள்ளதால், நீா்த்தேக்கத்தின் அளவு குறைந்துள்ளது. எனவே, அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம், அணையில் தேக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதோடு, அந்தியூா் சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாயிகள் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.