FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சிவகிரி அருகே விஷ ஜந்து கடித்து சிறுமி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விஷ ஜந்து கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:24 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விஷ ஜந்து கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே உள்ள வாழைத்தோட்டம் மாரங்காட்டூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (42). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சபிதா, சிவகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் யெஸ்வந்த் (14), மகள் பிரணிதாஸ்ரீ (8).

இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தியின் மனைவி அங்குள்ள விவசாய பால் கூட்டுறவு சங்கத்தில் தங்களது கால்நடையின் பாலை ஞாயிற்றுக்கிழமை ஊற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தபோது வீட்டிலிருந்த மகள் பிரணிதா ஸ்ரீ மாட்டுக்கொட்டகையில் தனது இடது காலில் ஏதோ ஒன்று கடித்துவிட்டதாக சொல்லி அழுதுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிரணிதா ஸ்ரீக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுபோது, அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments