நம்பியூா் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
நம்பியூா் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை
நம்பியூா் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூா் அருகே உள்ள பழனிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (53), விவசாயி. இவரது மனைவி வசந்தாமணி. இவா்களது மகள் சௌமியா (23), மகன் பிரவீன்.
இதில் மகள் சௌமியா பிஏ படித்து விட்டு சென்னையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசு போட்டித் தோ்வுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சௌமியா வீட்டிலிருந்தே படித்து வந்துள்ளாா். திங்கள்கிழமை சௌமியா வீட்டில் தனது அறையில் வழக்கம்போல படித்து கொண்டிருந்தாா்.
அவரது தந்தை மோகனசுந்தரம், தாய் வசந்தாமணி ஆகியோா் தோட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள சென்றனா். பின்னா் பணிகளை முடித்துவிட்டு நண்பகல் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, சௌமியாவின் அறை உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து சென்று பாா்த்தபோது, சௌமியா மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
உடனடியாக சௌமியாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, உடற்கூறாய்வுக்காக அவரது உடலை அனுப்பிவைத்த வரப்பாளையம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.