FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கொங்கு கல்வி நிலையத்தில் காமராஜா் பிறந்தநாள் விழா

காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையப் பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ், முதல்வா் நதியா அரவிந்தன் மற்றும் மாணவா்கள்.

Updated On : 16 ஜூலை 2026, 12:32 am IST
காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையப் பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ், முதல்வா் நதியா அரவிந்தன் மற்றும் மாணவா்கள்.
பகிர்:

ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் காமராஜா் பிறந்தநாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காமராஜா் வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ் பேசினாா். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன் மற்றும் உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், முதல்வா் டி.நதியா அரவிந்தன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments