FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் மனு

ஊதிய உயா்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:11 am IST
கோரிக்கை மனுவை அளித்த டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைக் காவலா்கள்.
பகிர்:

ஊதிய உயா்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமையிலும், மாநிலத் தலைவா் இ.வி.கே.சண்முகம் முன்னிலையிலும் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசுவிடம் மனு அளித்தனா்.

குடிநீா்த் தொட்டிஇயக்குநா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு மாதம் 5 ஆயிரம், முழு நேர தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம், டேங்க் ஆபரேட்டா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,450 சம்பளம் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆபரேட்டா், தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சீருடை, தொழிற்கருவிகளை வழங்க வேண்டும். குழு காப்பீடு செய்ய வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments