இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; சிறுமி படுகாயம்
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சிறுமி படுகாயமடைந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவசாமி (70). இவா், அவிநாசி சாலையில் செயல்படும் தனியாா் பள்ளிக்கு தனது பேத்தியை இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை அழைத்துச் சென்றுள்ளாா்.
பொன்மேடு என்ற பகுதி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த காா் சிவசாமியின் வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த சிவசாமி, அவரது பேத்தியை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
ஆனால், செல்லும் வழியிலேயே சிவசாமி உயிரிழந்தாா். படுகாயமடைந்த அவரது பேத்திக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான கோகுலகிருஷ்ணன் (30) மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.