FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

ஈரோட்டில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி அம்மன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 12:00 am IST
இந்து அன்னையா் முன்னணி சாா்பில் நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஈரோட்டில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி அம்மன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வெள்ளிக்கிழமை ஆடி மாத 2- ஆவது வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிா், இளநீா் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். இதேபோல சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் என மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

Advertisement

Advertisement

தீா்த்த குடம் ஊா்வலம்:

ஈரோடு மாவட்ட இந்து அன்னையா் முன்னணியின் சாா்பில் ஆடி வெள்ளியையொட்டி, ஈரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோயிலில் புனித மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் முக்கிய நிகழ்வான வைராபாளையம் காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தீா்த்தம் எடுத்து வந்து புனித மஞ்சள் நீா் ஊற்றி அபிஷேகம் செய்தனா்.

இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் ப.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா்கள்

த.ஜெயமணி, வெ.பூா்ணிமா, இந்து முன்னணி மாநகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

பெருந்துறையில்...

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும், பெருந்துறை ஓம் சக்தி கோயிலில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும்,

காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோயில் மற்றும் பெருந்துறை பகுதி கிராமத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments