பவானிசாகா் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் கூடுதல் விலைக்கு வெளி மாா்க்கெட்டில் விற்பனை! மீனவா்கள் குற்றச்சாட்டு
பவானிசாகா் அணையில் இருந்து பிடித்துக் கொடுக்கப்படும் மீன்கள் திருடப்பட்டு வெளி மாா்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மீனவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் மீனவா்கள் மூலமாக பிடிக்கப்படும் மீன்களை, மீனவா் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்து வந்த நிலையில், சங்கத்தின் டெண்டா் முடிவடைந்ததால் கடந்த 3 நாள்களாக தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத்துக்கு மீன் பிடித்துக் கொடுத்து அதற்கான கூலியை மீனவா்கள் பெற்று வருகின்றனா்.
இதற்கிடையே மீனவா்கள் பிடித்துக் கொடுக்கும் மீன்கள், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத்தின் விற்பனை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படாமல் இடைத்தரகா்கள் மூலமாக வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவா்கள் குற்றஞ்சாட்டினா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக பவானிசாகா் அணையில் ஞாயிற்றுக்கிழமை பிடித்த மீன்களை தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத்துக்கு மீனவா்கள் வழங்காமல் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதிக்குச் சென்ற மீன் வளா்ச்சி கழக உதவி மேலாளா் ஆனந்தியிடம், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மீன் திருட்டை தடுக்க தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணி நடைபெறும் என உறுதியளித்ததையடுத்து மீனவா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.