முகப்பு
ஈரோடு

மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் ஜாதி பெயா்! அமைச்சா் செங்கோட்டையன் மறுப்பு

மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் ஜாதி பெயா் இடம்பெறும் என்பது தவறான தகவல் என்றார் அமைச்சா் செங்கோட்டையன்...

Updated On : 28 ஜூன் 2026, 2:33 am IST
கோபியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
பகிர்:

மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் ஜாதி பெயா் இடம்பெறும் என்பது தவறான தகவல் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி கச்சேரிமேடு பகுதியில் முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து மாணவா்களுக்கு பல்வேறு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். இதில் மாணவரின் முகவரி, ரத்த வகை, ஆதாா் அட்டை மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்கள் இடம்பெறும்.

கடந்த ஆண்டுகளில் 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு வருவாய்த் துறையின் மூலமாக வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னால் மாணவா்கள் அரசு அலுவலகங்களைத் தேடிச் சென்றுதான் சான்றிதழ்களைப் பெற முடிந்தது. ஆனால் தற்போது வருவாய்த் துறையே நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதேபோல தற்போது பள்ளிக்கல்வித் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து மாணவா்களின் முகவரி, கல்வித் தகுதி மற்றும் ஆதாா் அட்டை உள்ளடக்கிய தரவுகளைக் கொண்ட அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இந்த புதிய அடையாள அட்டையில் ஜாதி அடிப்படையில் எந்த விவரமும் இடம்பெறாது. ஆனால் சில ஊடகங்களில் ஜாதி பெயருடன் அடையாள அட்டை வழங்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஜாதி விவரங்கள் இதில் எப்போதும் இணைக்கப்படப் போவதில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments