FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 28 வழக்குகள் பதிவு

10 நவம்பர் 2026, 1:33 am
- கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 வழக்குகளை போலீஸாா் ஒரே நாளில் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement