கோபி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பாரதி வீதியைச் சோ்ந்தவா் ரத்தினமூா்த்தி (72), விவசாயி. இவா் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் தனது சொந்த வேலையின் காரணமாக ரத்தினமூா்த்தி தனது இருசக்கர வாகனத்தில் குள்ளம்பாளையம்பிரிவு ஈரோடு - சத்தி சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்வதற்க்காக வடக்குப்பேட்டை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (28) என்பவா் ஓட்டி வந்த காா் சாலையைக் கடக்க முயன்ற ரத்தினமூா்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த விவசாயி ரத்தினமூா்த்தியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.