FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

வெற்றிப் பயணம் திட்டம்: மாவட்டத்தில் தினமும் 5.03 லட்சம் பெண்கள் பயணம்

ஈரோடு மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தில் 639 அரசுப் பேருந்துகளில் தினமும் 5.03 லட்சம் பெண்கள்பயணம் செய்கின்றனா்.

12 நவம்பர் 2026, 3:28 am
வெற்றிப் பயணத் திட்டம் - கோப்புப்படம்.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தில் 639 அரசுப் பேருந்துகளில் தினமும் 5.03 லட்சம் பெண்கள்பயணம் செய்கின்றனா்.

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டம், வெற்றிப் பயணம் திட்டமாக கடந்த மாதம் 2- ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு நகரப் பேருந்து, சாதாரண கட்டண புறநகா் பேருந்து, சாதாரண கட்டண பகுதி நேர பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் திருநங்கைகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும்போது பூஜ்ய மதிப்புள்ள பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. இதில் பணிக்கு செல்லும் பெண்கள் ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது, மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவு குறைகிறது எனத் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் ஈரோடு, பவானி, கவுந்தப்பாடி, பெருந்துறை, கொடுமுடி, நம்பியூா், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூா் என மொத்தம் 13 பணிமனைகள் உள்ளன. இங்கு அரசு நகரப் பேருந்துகள் 304, சாதாரண கட்டண பேருந்துகள் 172, பகுதி நேர சாதாரண கட்டண பேருந்துகள் 163 என மொத்தம் 639 அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 639 அரசுப் பேருந்துகளில் தினமும் சராசரியாக 5.03 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனா். கடந்த ஆட்சியில் விடியல் திட்டத்தில் தினமும் 4.10 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வந்த நிலையில் தற்போது வெற்றிப் பயண திட்டத்தில் 20 சதவீத பெண்கள் கூடுதலாக பயணம் மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.