முகப்பு
ஈரோடு

தாளவாடி அருகே கோயில் வளாகத்தில் சூதாட்டம்: போலீஸாா் மீது தாக்குதல்

24 நவம்பர் 2026, 12:03 am
தாளவாடி அருகே கோயில் வளாகத்தில் சூதாட்டம்: போலீஸாா் மீது தாக்குதல்
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தாளவாடி அருகே கோயில் வளாகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபா்களை எச்சரித்த போலீஸாா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகேயுள்ள கொங்கள்ளி கோயில் வளாகத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழைம ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கா்நாடக மாநில இளைஞா்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அப்போது, அவா்கள் தாளவாடி காவல் ஆய்வாளா் வாசு உள்பட 3 போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனா். காயமடைந்த போலீஸாரை அங்கிருந்த மக்கள் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்ட நபா்களைத் தேடி கா்நாடக மாநிலத்துக்குச் சென்றுள்ளனா்.