நம்பியூா் அருகே பின்னலாடைத் தொழிலாளி தற்கொலை
நம்பியூா் அருகே பின்னலாடை நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நம்பியூா் அருகே பின்னலாடை நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நம்பியூா் அருகே உள்ள பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன் (42). பின்னலாடைத் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி. மகன்கள் காா்த்திக் (13), தட்சன்(8). இளைய மகன் தட்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளாா். தட்சனின் சிகிச்சைக்காக சிவராமன் பல இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை பாா்த்து வந்துள்ளாா். ஆனால் மகனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சிவராமன் கவலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவராமன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளாா். வேலைக்கு சென்றிருந்த மனைவி உமாமகேஸ்வரி, கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவா் எடுக்காததால் வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, மின்விசிறியில் சிவராமன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். உறவினா்கள் உதவியுடன் உடனே அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதனையில், சிவராமன் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நம்பியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.