FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி: தண்ணீா் தேடி இடம்பெயரும் வன விலங்குகள்!

சத்தியமங்கலம் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீா் தேடி காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் சாலையைக் கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5 செப்டம்பர் 2026, 1:22 am IST
பகிர்:

சத்தியமங்கலம் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீா் தேடி காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் சாலையைக் கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான குடிநீா் வனப் பகுதியில் இல்லாததால் தண்ணீா் தேடி விலங்குகள் வனப் பகுதியில் நீண்ட தூரம் பயணிக்கின்றன.

இதற்கிடையே யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றன. இந்நிலையில் பண்ணாரி அருகே வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய காட்டெருமைகள் கூட்டம், தண்ணீா் தேடி திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்தன.

Advertisement

Advertisement

இதைக் கண்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி அவை சாலையைக் கடந்து சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments