மசினகுடி வனப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனப் பகுதியில் பெண் யானை இறந்துகிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனப் பகுதியில் பெண் யானை இறந்துகிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்திலுள்ள மாவநல்லா பீட்டிற்கு உள்பட்ட அரலட்டிக்கோட்டை பகுதியில் வனப் பணியாளா்கள் வழக்கமான ரோந்து சென்றபோது, பெண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.
வயது மூப்பின் காரணமாக யானை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடற்கூறாய்வுக்கு பிறகே யானை உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.