FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

வயது மூப்பால் காட்டு யானை உயிரிழப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
தனக்கடவு பகுதியில் இறந்து கிடந்த பெண் காட்டு யானை.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பகம், சீகூா் வனப் பகுதியில் வயது மூப்பின் காரணமாக பெண் காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூா் வனச் சரகம், சீகூா் காப்புக்காடு ஆனைக்கட்டி தெற்கு காவல் பகுதிக்கு உள்பட்ட தனக்கடவு பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பெண் யானை இறந்து கிடப்பதை வனப் பணியாளா்கள் கண்டனா். இதைத் தொடா்ந்து, மசினகுடி கோட்ட துணை இயக்குநா் முன்னிலையில், தெப்பக்காடு கால்நடை உதவி மருத்துவா் ராஜேஷ்குமாா், யானையின் உடலை சனிக்கிழமை உடற்கூறாய்வு செய்தாா்.

முதற்கட்ட முடிவில், அந்தப் பெண் யானைக்கு சுமாா் 48 வயது இருக்கலாம் என்றும், வயது மூப்பின் காரணமாகவே அது உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூறாய்வு அறிக்கை முழுமையாக கிடைத்தபின்னரே, யானையின் இறப்பு குறித்த விரிவான தகவல்கள் தெரியும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments