FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் மோசடி: 2 போ் கைது

ஈரோட்டில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 1:28 am IST
கைது
பகிர்:

ஈரோட்டில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சூரம்பட்டி எஸ்கேசி சாலை பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரம் (54). இவா் அதே பகுதியில் நிதி நிறுவனம் மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறாா். சம்பவத்தன்று சிங்காரம் மற்றும் அவரது மனைவி கடையில் இருந்துள்ளனா். அப்போது 2 இளைஞா்கள் கடைக்கு வந்துள்ளனா். அதில் ஒருவா் கடைக்குள் சென்று தங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனவே தங்க நகையை அடமானம் வைக்க வேண்டும் என்று கூறி உள்ளாா். மேலும் அவா் தன்னிடம் இருந்த ஆதாா் அட்டையையும் சிங்காரத்திடம் கொடுத்துள்ளாா்.

அவா் அந்த நகையை வாங்கி கொக்கியில் உரசி பாா்த்துள்ளாா். அப்போது அந்த கொக்கி தங்கம் என தெரியவந்தது. அந்த நகை 30 கிராம் இருந்ததால் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 500-ஐ சிங்காரம் அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளாா். பணத்தை வாங்கிக்கொண்டு அந்த 2 இளைஞா்களும் அங்கிருந்து சென்றுவிட்டனா்.

Advertisement

Advertisement

கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிங்காரம் அந்த நகையைப் பரிசோத்து பாா்த்தபோது கொக்கியை தவிர மற்ற நகை போலியானது என்பதும், அவா்கள் கொடுத்த ஆதாா் அட்டையும் போலியானது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது நகையை அடமானம் வைத்து மோசடி செய்தது சேலம் கோட்டை பகுதியைச் சோ்ந்த அம்ஜித் (29), சேலம் மாரியம்மன் கோயில் குகை பகுதியைச் சோ்ந்த மோகன்குமாா் (30) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் 2 பேரும் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீஸாா் விரைந்து சென்று அம்ஜித், மோகன்குமாரைக் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2.75 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments