FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குப்பைக் கிடங்காக மாறும் சிறுவர் பூங்கா: குன்னூரில் மக்கள் வேதனை

குன்னூர்  மாடல்அவுஸ் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை அகற்றி, அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் தொட்டிகளை  நகராட்சி

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:23 am IST
பகிர்:

குன்னூர்  மாடல்அவுஸ் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை அகற்றி, அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் தொட்டிகளை  நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது. இதனால்  அப்பகுதியில்   துர்நாற்றம் வீசுவதாகவும்,  நகராட்சி நிர்வாகம்  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  இப்பகுதி  மக்கள் கூறுகின்றனர்.   
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 8ஆவது வார்டு பகுதியில் காமராஜபுரம்,  ரெய்லி காம்பவுண்ட்,  மாடல் ஹவுஸ் போன்ற பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. 
இங்கு அமைக்கப்பட்டிருந்த  சிறுவர் பூங்கா  பாராமரிப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளது. 
மேலும் அங்குள்ள  விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.
இதன் காரணமாக,  நகராட்சி நிர்வாகம் தற்போது  குப்பைத் தொட்டியை இங்கு வைத்துள்ளது. ஆனால் இங்கு சரிவர குப்பைகள் அகற்றப்படுவதில்லை. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. 
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடமும், சட்டப் பேரவை உறுப்பினரிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என  இப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இது குறித்து குன்னூர் நகராட்சி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments