வயநாடுக்கு 16 டன் நிவாரணப் பொருள்கள்: கூடலூர் காங்கிரஸார் கொண்டு சென்றனர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், வயநாடு மாவட்ட மக்களுக்கு கூடலூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் 16 டன் அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், வயநாடு மாவட்ட மக்களுக்கு கூடலூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் 16 டன் அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
கூடலூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வயநாடு மாவட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு அரிசி, துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் லாரியில் கொண்டு செல்லப்பட்டது. நிவாரணப் பொருள்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேசன் தனது ஒரு மாத சம்பளமான ரூ. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500க்கான வரைவோலையை குழுவிடம் வழங்கினார். இந்தத் தொகை வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருள்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோஷி பேபி, கே.பி.முகமது,
மாவட்ட துணைத் தலைவர் அம்சா, சுஞ்ஞாப்பி, செய்யது முகமது, மாவட்டச் செயலாளர்கள் சிவா, டி.கே.நாராயணன், சிறுபாண்மை அணி மாவட்டத் தலைவர் செய்தலவி, வட்டாரத் தலைவர் அஷரப், கூடலூர் நகரத் தலைவர் அப்துப்பா, துணைத் தலைவர் சுல்பிகர் அலி, ஜோசப், சபாது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிவாரணப் பொருள்கள் சுல்தான்பத்தேரி சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.சி.பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்பேரில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.