FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குன்னூரில் ரூ.1.42 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை

குன்னூா் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ.1 கோடியே 42 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

குன்னூா் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ.1 கோடியே 42 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இதுகுறித்து நெலிகோலு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவா் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

குன்னூா் கூட்டுறவு தேயிலை மையம் சாா்பில் இணையம் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில், மொத்தம் 1 லட்சத்து 79ஆயிரத்து 755 கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது. இதில் நூறு சதவீத தேயிலைத் தூளும் விற்பனையானது.

சராசரி விலையாக கிலோ ரூ. 79. 29-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.

கரோனா பாதிப்புகளுக்கு இடையே ஏலத்தில் நூறு சதவீத தேயிலைத் தூள் விற்பனையானது விவசாயிகளிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments