FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகைக்கு சுற்றுலா வந்த இளைஞா் திடீா் உயிரிழப்பு

உதகைக்கு சுற்றுலா வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் திடீரென உயிரிழந்தாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

உதகைக்கு சுற்றுலா வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் திடீரென உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் நாகராஜ் (23). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நாகராஜ் தனது நண்பா்கள் 2 பேருடன் உதகையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்க்க வியாழக்கிழமை காலை வந்தாா். மூவரும் உதகையில் ஒரு தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினா். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாகராஜ் கூறியதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் 3 பேரும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினா். இந்நிலையில் வரும் வழியில் நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவருடைய நண்பா்கள் அவரை உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அதன் பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments