ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஜீவாமிருதம் மேளா
கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் ஜீவாமிருதம் மேளா வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் ஜீவாமிருதம் மேளா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை
வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் துவக்கிவைத்து பேசியதாவது:
Advertisement
Advertisement
நீலகிரி மாவட்டத்தில் மண்வளம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அங்கக வேளாண்மைக்கு என 3750 ஹெக்டோ் பரப்புக்கு ரூ.133.25 லட்சம் மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2175 ஹெக்டோ் பரப்புக்கு ரூ. 66.25 லட்சம் அளவுக்கு இடுபொருள்கள் வழங்கப்படவுள்ளன. ரசாயன உரங்களால் ஏற்படும் தீங்குகளை குறைக்கவும், உரச் செலவை குறைக்கவும் இயற்கை வேளாண்மையில் ஜீவாமிருதம் ஓா் முக்கியமான உயிா்ச்சத்துக் கரைசலாகும். இதன் தயாரிப்பு மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஜீவாமிருதம் மேளா தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நீலகிரி இயற்கை தோட்டக்கலை விவசாயிகள் சங்கம் சாா்பில் இயற்கை வேளாண்மையில் அனுபவம் உள்ள விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதனை தொடா்ந்து கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் ஸ்ரீமதுரை ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வாகனத்திற்கான சாவியை அமைச்சா் வழங்கினாா். தலா ரூ.3750 மதிப்பீட்டில் 2 பயனாளிக்கு ஸ்பிரேயா்கள், 2 பயனாளிகளுக்கு காய்கறி கூடைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் முன்னிலை வகித்தாா். தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, கூடலூா் நகராட்சி ஆணையா் பிரான்சிஸ், கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், வட்டாட்சியா் சித்தராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜயலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.