உதகையில் துறவறம் மேற்கொண்ட ஜெயின் சமூக இளம்பெண்
உதகையில் துறவற வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயின் சமூக இளம்பெண்ணை அலங்கார வாகனத்தில் ஊா்வலமாக அழைத்து வந்து ஜெயின் சமூகத்தினா் வியாழக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.
உதகையில் துறவற வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயின் சமூக இளம்பெண்ணை அலங்கார வாகனத்தில் ஊா்வலமாக அழைத்து வந்து ஜெயின் சமூகத்தினா் வியாழக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை மெயின் பஜாா் பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவா் ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த பூனம் கோத்தாரே. இவரது மனைவி பரிமளா. இவா்களுக்கு மும்குஸ் தமன்னா (21) என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனா். மும்குஸ் தமன்னா துறவற வாழ்க்கை மேற்கொள்ள முடிவு செய்தாா். இதற்கான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகை மெயின் பஜாரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊா்வலம் தொடங்கி மெயின் பஜாா், மாரியம்மன் கோயில் சந்திப்பு வழியாக ஜெயின் கோயிலை வந்தடைந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மும்குஸ் தமன்னா அழைத்து வரப்பட்டாா்.
Advertisement
Advertisement
கோயிலில் மும்குஸ் தமன்னா அணிந்திருந்த அலங்கார உடைகள், நகைகள் ஆகியவை அகற்றப்பட்டன. பின்னா் அவருக்கு வெள்ளை உடை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
இதில் திரளான ஜெயின் சமூக மக்கள் கலந்துகொண்டு வாழ்த்தி அனுப்பிவைத்தனா்.
ஜெயின் சமூகத்தில் துறவற வாழ்க்கையின்போது சூரியன் உதித்த பின்னா்தான் உணவு, நீா் அருந்த வேண்டும். தங்களது வாழ்நாள் முழுவதும் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் நடைப்பயணமாகவே செல்ல வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை தங்களது தலை முடிகளை தங்கள் கைகளாலே அகற்றிக் கொள்வாா்கள் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.