FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விரைவில் வெளியாகும் பூலான் தேவி திரைப்படம்!

பூலான் தேவியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட பூலான் படம் குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 1:33 pm IST
பகிர்:

மறைந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் பூலான் தேவியின் வாழ்க்கையைத் தழுவி உருவான பூலான் திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பிரபல கொள்ளைக்காரியாக அறியப்பட்ட பூலான் தேவி, பின்னர் அரசியலில் நுழைந்தார். சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து மக்களவை உறுப்பினரானார். அதற்கு முன், பூலான் தேவி தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களைச் சுட்டுக்கொன்றதற்காக பெரிய அதிர்வுகளையும் ஏற்படுத்தியவர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி, பூலான்தேவி அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அதில் ஷேர் சிங் ரானா மட்டுமே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பூலான் தேவியின் வாழ்க்கையைத் தழுவி உருவான பூலான் என்கிற திரைப்படம் விரைவில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிச்சி மேத்தா இயக்கிய இப்படத்தை நாமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

The film Phoolan, based on the life of the late former Lok Sabha member Phoolan Devi, is set to be released soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments