FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

47 வினாடிகள் முன்பு
தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகையை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சிடைந்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான  உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.  இவா்கள் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் வார விடுமுறை மற்றும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனைக்கு ஏராளமானோா் வந்திருந்தனா். இங்கு  அமைந்துள்ள தொலைநோக்கி கோபுரத்தில் இருந்து, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை காட்சிகளையும், வானுயா்ந்த மலை முகடுகளையும், அதன் நடுவே காட்சியளிக்கும் அணைகளையும், சமவெளிப் பிரதேசங்களையும் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்தும்,  உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments