FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆடி அமாவாசை: சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஆடி அமாவாசை சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகளைப் பற்றி...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 8:29 am IST
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

ஆடி அமாவாசையை கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் கண்டுகளித்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாள்களிலும், பண்டிகை நாள்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆடி அமாவாசையான இன்று முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆடி அமாவாசையையொட்டி, சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

மேலும், படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

summary

Tourists who gathered at the Kanyakumari beach on the occasion of Aadi Amavasai enjoyed watching the sunrise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments