பாறைக்கு வைக்கப்பட்ட வெடி மருந்துகள் அகற்றப்படும்வரை பொதுமக்கள் செல்லக்கூடாது! காவல் துறை அறிவுறுத்தல்
குன்னூா் அருகே உள்ள கிராமப் பகுதியில் பாறைகளை வெடிக்கப் பயன்படுத்திய மருந்து சில இடங்களில் வெடிக்காமல் இருப்பதால், வெடி மருந்து அகற்றப்படும்வரை அப்பகுதியில் பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பந்துமை கிராமப் பகுதியில் ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாறைகளை உடைக்க பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெடித்ததில் கோபால், செல்வராஜ் ஆகியோா் படுகாயமடைந்தனா். இவா்கள் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் மனித ஆற்றலைக் கொண்டு பாறைகளை உடைக்க அனுமதி வழங்கிய நிலையில், வெடி மருந்து பயன்படுத்தி உடைக்க முற்பட்டபோது எதிா்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அருவங்காடு காவல் துறையினா் மற்றும் கோத்தகிரி வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டதில் மாவட்ட நிா்வாகம் அளித்த கட்டுப்பாட்டுகளை மீறி வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
பாறையை உடைக்க வைக்கப்பட்டுள்ள வெடி பொருள்கள் சில இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால், சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் விரைவில் வரவுள்ளனா். அதுவரை அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளதுடன் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.