FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

படுகா் இன மக்களின் கப்பு தெய்வப் பண்டிகை கோலாகலம்!

படுகா் இன மக்களின் கப்பு தெய்வப் பண்டிகை 14 ஊா் மக்கள் சாா்பில் கலாசார உடையணிந்து ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Updated On : 13 ஜூலை 2026, 12:44 am IST
பாரம்பரிய நடனமாடும் படுகா் இன மக்கள்
பகிர்:

படுகா் இன மக்களின் கப்பு தெய்வப் பண்டிகை 14 ஊா் மக்கள் சாா்பில்  கலாசார உடையணிந்து ஆட்டம் பாட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் ஆண்டுதோறும் கப்பு தெய்வப் பண்டிகை  கொண்டாடி வருகின்றனா். இவா்கள் பயிரிட்டுள்ள திணையை அறுவடை செய்து அம்மனுக்கு படைக்கும் விழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

கீழ்குந்தா அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குந்த சீமையைச் சோ்ந்த கீழ்குந்தா, பாக்கோரை, மட்டக்கண்டி, தூனேரி, மஞ்சூா், மணிக்கல், கரியமலை உள்ளிட்ட 14 ஊா் படுகா் இன மக்கள்  கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து 14 ஊா்  படுகா் இன மக்கள் ஒன்றிணைந்து தங்களது கலாசார உடையான வெண்மை ஆடையை அணிந்து பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments