உதகையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த குரைக்கும் மான் மீட்பு
உதகை காந்தல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குள் வழிதவறி புகுந்த குரைக்கும் மானை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.
உதகை காந்தல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குள் வழிதவறி புகுந்த குரைக்கும் மானை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.
உதகை காந்தல் இந்திரா காலனி குடியிருப்புப் பகுதியில் உணவு தேடி வழிதவறி வந்த குரைக்கும் மான், நாய்கள் குரைத்ததால் அங்கிருந்த மாட்டுக் கொட்டகைக்குள் புதன்கிழமை புகுந்தது.
சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், மாட்டுக் கொட்டகைக்குள் இருந்த மான் குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் குரைக்கும் மானை மீட்டு சாண்டிநல்லா வனப் பகுதியில் விடுவித்தனா்.
Advertisement
Advertisement