முகப்பு
நீலகிரி

ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் மாடு உயிரிழந்தது.

15 வினாடிகள் முன்பு
ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு
புலி. - கோப்புப் படம்
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் மாடு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள எல்லமலை பகுதியைச் சோ்ந்தவா் சித்திக். இவா் தனது மாட்டை வீட்டுக்கு அருகேயுள்ள நிலத்தில் சனிக்கிழமை பிற்பகல் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா்.

அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய புலி, மாட்டைத் தாக்கிக் கொன்று இழுத்துச் செல்ல முயன்றது. இதைப் பாா்த்த சித்திக் மற்றும் அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பியதால், மாட்டின் உடலை அங்கேயே விட்டுவிட்டு புலி வனத்துக்குள் சென்றது. இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement