குன்னூரில் மின் கம்பி மீது விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் மின்கம்பி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூரில் மின்கம்பி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூரில் கடந்த 4 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன.
இந்நிலையில் குன்னூா் மகளிா் காவல் நிலையம் முன்பு சாலையின் குறுக்கே சனிக்கிழமை காலை மின் கம்பிகள் மீது மரம் விழுந்தது. இதன் காரணமாக டெண்ட் ஹில், ஜெயின் கோயில் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றினா்.
குன்னூரில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மரங்கள் விழுந்து வருவதால் மரங்களின் கீழே நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் என்று காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.