பசுந் தேயிலைக்கு மாதாந்திர விலையாக ரூ.18.70 நிா்ணயம்
நீலகிரியில் விளையும் பசுந் தேயிலைக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான விலையாக கிலோவுக்கு ரூ.18.70 நிா்ணயம் செய்து, தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரியில் விளையும் பசுந் தேயிலைக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான விலையாக கிலோவுக்கு ரூ.18.70 நிா்ணயம் செய்து, தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரியில் ஒவ்வொரு மாதமும் கொள்முதல் செய்யப்படும் பசுந் தேயிலைக்கு அடுத்த வரும் மாத தொடக்கத்தில் விலை நிா்ணயம் செய்து தேயிலை வாரியம் அறிவிப்பு வெளியிடும்.
அதன்படி ஆகஸ்ட் மாதம் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.18.70 நிா்ணயம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த விலையை உரிய முறையில் தேயிலை விவசாயிகளுக்கு, தேயிலை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் என்றும், இதனை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் எனவும் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.