காற்றாலையில் தீ விபத்து
பல்லடம், துத்தாரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவன காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
பல்லடம், துத்தாரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவன காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பல்லடம் துத்தாரிபாளையத்தில் காற்றாலை நிறுவி மின் உற்பத்தி செய்து வருகிறார்.
இந்நிலையில், பல்லடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் ராமகிருஷ்ணின் காற்றாலைப் பண்ணையில் உள்ள ஒரு காற்றாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பல்லடம் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.