திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தம்பதி ஆஜர்
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் தம்பதி திருப்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் தம்பதி திருப்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் 2015 மே 4ஆம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ரூபேஷ், இவரது மனைவி சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், ரூபேஷ், சைனா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தபோது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸார் இந்தத் தம்பதி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் மாவோயிஸ்ட் தம்பதி ரூபேஷ், சைனா ஆகியோர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தம்பதியர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.