மாணவி பாலியல் பலாத்காரம்: சகோதரியின் கணவர் கைது
பல்லடத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டிங் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
பல்லடத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டிங் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், சூலூர், கலங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (39), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி சந்திரா (34). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பல்லடம் பட்டேல் வீதியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
சந்திராவின் தங்கை திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்புப் படித்து வரும் இவர் 2017இல் பள்ளி அரையாண்டு விடுமுறையில் டிசம்பர் மாதம் தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரை ராஜமுருகன் மிரட்டி பல முறை பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது, ராஜமுருகன்தான் இதற்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10.3.18ஆம் தேதி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பல்லடம் பேருந்து நிலையத்தில் ராஜமுருகனை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.