FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

எருமையைக் கடத்திய இருவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பொது மக்கள்

அவிநாசியில் பட்டப் பகலில் எருமையைத் திருடிச் சென்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

Updated On : 26 ஜூன் 2018, 7:29 am IST
பகிர்:

அவிநாசியில் பட்டப் பகலில் எருமையைத் திருடிச் சென்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முருகசாமி. இவரது மனைவி செல்வமணி (57). இவர் தனது எருமையை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் கட்டி வைத்துள்ளார். வீட்டுக்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்துக்குப் பின் வந்து பார்த்தபோது எருமையை காணவில்லை. சத்தம் போட்டவுடன், அருகில் இருந்தவர், இரு நபர்கள் சரக்கு வேனில் வந்து எருமையை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து செல்வமணியின் உறவினர்கள் விரைந்து சென்று பார்த்த போது அவிநாசி - திருப்பூர் சாலையில் பெட்ரோல்  நிரப்புவதற்காக அந்த சரக்கு வேன் எருமையுடன் நின்றுகொண்டிருந்தது. இதையடுத்து வேனில் இருந்த இருவருக்கும் தர்ம அடிகொடுத்து அவிநாசி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் பல்லடம் 65-வேலம்பாளையத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் சிவா (எ) சிவானந்தன் (29), வேனை ஓட்டிவந்தவர் சோளிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர். மேலும், சரக்குவேன், எருமையை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments