விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சம்மேளனம், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் காங்கயத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சம்மேளனம், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் காங்கயத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் ஒன்றியச் செயலர் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தார். இதில், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும், பெட்ரோலிய எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.பி.பழனிச்சாமி, ஒன்றிய துணைச் செயலர் சிவகுமார், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் நதியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.