நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் முதியவர் சாவு
அவிநாசியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி, கச்சேரி வீதி நாயக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ஈஸ்வரன் (62). இவர், திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, காரில் அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். ஆட்டையாம்பாளையம் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் அவிநாசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.