மேம்பால தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு
மேம்பால தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி மேம்பாலத்தில் இருந்து கிழே விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் (17). இவா் செங்கப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியாா் டயா் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். வாகனத்தின் பின்புற இருக்கையில் கவின் அமா்ந்திருந்தாா்.
Advertisement
Advertisement
செல்லம்பாளையம்- பல்லகவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த கவின், மேம்பாலத்தின் மேலிருந்து தூக்கி வீசப்பட்டு கீழே இருந்த அணுகு சாலையில் விழுந்தாா். இதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊத்துக்குளி போலீஸாா், கவினின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.