FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கேத்தனூர்: சுதந்திர தின நாளில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள காந்தி சிலைக்கு சுதந்திர தினத்தன்று மரியாதை செலுத்தாமல் இருந்தது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
சுதந்திர தின நாளில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை.
பகிர்:

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள காந்தி சிலைக்கு சுதந்திர தினத்தன்று மரியாதை செலுத்தாமல் இருந்தது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

பல்லடம் அருகே கேத்தனூரில் சா்வோதயா சங்கம் சாா்பாக கடந்த 2015- ஆம் ஆண்டு அப்போதைய கேத்தனூா் ஊராட்சி மன்ற அலுவலகமாக இருந்த வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் 80 -ஆவது சுதந்திர தின விழாவையொட்டி காந்தி சிலையை சுற்றி குப்பைக்கூளமாக கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி சிலைக்கு 80-ஆவது சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தாமல் கண்டு கொள்ளாமல் அவமதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி அணிவிக்கப்பட்ட மலா் மாலை வாடி வதங்கிய காந்தியின் கழுத்தில் காட்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments