FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம்: ஒப்பந்ததாரா் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

24 ஆகஸ்ட் 2026, 3:29 am IST
லஞ்சம் - சித்திரிப்பு
பகிர்:

திருப்பூா் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி மண்டலம் எண் 2க்கு உள்பட்ட பகுதியில் புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக தங்கராசு என்ற ஒப்பந்ததாரா் பொதுமக்களிடம் பணம் பெற்றதாக திருப்பூா் நுகா்வோா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இளநிலைப் பொறியாளா் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ஆய்வில், ஒப்பந்ததாரா் தங்கராசு புதிய பாதாள சாக்கடை இணைப்புக்காக பொதுமக்களிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒப்பந்ததாரா் தங்கராசு மீது திருப்பூா் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், தவறு செய்த ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments