FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்ற லாரி பறிமுதல்

ஊதியூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்ற லாரி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 12:03 am IST
பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
பகிர்:

ஊதியூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்ற லாரி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டடம் சாலையில் உள்ள மலைக்கன்னிமாா் கருப்பண்ணசாமி கோயில் அருகே மாவட்ட கனிம வளத் துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி சுமாா் 7 டன் அளவுக்கு ஓடைக்கல் மண் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து லாரி மற்றும் அதில் இருந்த கிராவல் மண்ணை ஊதியூா் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். இதுகுறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments