ரயில் மூலம் போதைப் பொருள்கள் கடத்தல்: பயணிகளிடம் போலீஸாா் தீவிர சோதனை
ரயில் மூலமாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடம் ரயில்வே மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
ரயில் மூலமாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடம் ரயில்வே மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரிய தினமும் ஏராளமான தொழிலாளா்கள் ரயில் மூலமாக வந்து செல்கின்றனா். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் தினமும் திருப்பூா் வருகின்றனா். இவா்கள், கூட்டத்தைப் பயன்படுத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தி வருவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து கேரள-தில்லி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ், எா்ணாகுளம் பெங்களூரு இன்டா்சிட்டி, திருவனந்தபுரம் ஷாலிமா் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மூலமாக வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்த பயணிகளிடம் ரயில்வே போலீஸாா் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் ரயில் நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதில், வட மாநிலத் தொழிலாளா்கள் சிலா் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக கொண்டு வந்த புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனா். இந்த கண்காணிப்பு பணி தினமும் நடத்தப்படும் நிலையில் போதைப்பொருள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்படும் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.