FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பனியன் நூல் கழிவுக் கிடங்கில் தீ விபத்து

பெருமாநல்லூா் அருகே உள்ள பனியன் நூல் மற்றும் துணி கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

Updated On : 13 ஜூலை 2026, 12:43 am IST
கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான பனியன் கழிவு
பகிர்:

பெருமாநல்லூா் அருகே உள்ள பனியன் நூல் மற்றும் துணி கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

திருப்பூா், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (46). இவா், பெருமாநல்லூா் அருகே வாஷிங்டன் நகரில் தகர சீட் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக பனியன் நூல் மற்றும் துணி கழிவு நிலையம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கிடங்கை ஞாயிற்றுக்கிழமை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்து எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தினா் பாா்த்து அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்க முயன்றனா். அதற்குள் தீ மளமளவென வேகமாகப் பரவியது. ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

இருப்பினும் உள்ளே இருந்த காட்டன் நூல் கழிவு, பனியன் கழிவு, புத்தகங்கள், அட்டைப் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments