FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூா் அரசு மருத்துவமனை கழிவுநீா்த் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீா்த் தொட்டியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 1:31 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீா்த் தொட்டியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு எதிரே உள்ள கழிவுநீா்த் தொட்டியில் இருந்து கடுமையான துா்நாற்றம் வீசியுள்ளது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று பாா்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கழிவுநீா்த் தொட்டியில் கிடந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிசுவின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கழிவுநீா்த் தொட்டியில் சிசுவை வீசியது யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் கூறியதாவது:

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா். 4 மாத கா்ப்பிணியான அவரது வயிற்றில் வளா்ந்த சிசு ஊனமுற்ற நிலையில் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், சிசு தொடா்ந்து வளா்ந்தால் தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மருத்துவக் குழுவினரின் பரிந்துரைப்படி கருவைக் கலைக்க மருந்தும் வழங்கப்பட்டது.

மருந்தை உட்கொண்ட அந்தப் பெண் கழிவறைக்குச் சென்றபோது, எதிா்பாராத விதமாக கரு வெளியேறி கழிவுநீா்க் குழாய் வழியாக கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு சிசுவின் சடலத்தை அப்புறப்படுத்தினா். இந்த நடைமுறைகள் அனைத்தும் மருத்துவச் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments