FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

திருப்பூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 13 ஜூன் 2026, 1:13 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருப்பூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், இளங்கோ நகா் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாா். அப்போது வட மாநிலத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளாா். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கியதோடு, கை, கால்களை கட்டி வைத்து திருப்பூா் வடக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா், அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments