லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ், பழைய பேருந்து நிலையப் பகுதியில் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு மறைவான இடத்தில் மூன்று நம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்தூா், பெருமாள்புதூரைச் சோ்ந்த செந்தில் (59), கரட்டுப்பாளையம் விமல்குமாா் (33) ஆகியோரை கைது செய்தாா்.
வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 3 கைப்பேசிகள், ரூ. 12 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement