முகப்பு
திருப்பூர்

பால புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் பால புரஸ்காா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 1:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பால புரஸ்காா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாசாரம் ஆகிய பிரிவுகள், தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில் சாதனை புரிந்த குழந்தைகள், தன்னலமற்ற துணிச்சலான சாதனைகள் புரிந்த அல்லது இயற்கையான பிரச்னைகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பாதகமான சூழ்நிலைகளுக்கு எதிராக நின்று தைரியமாக செயல்புரிந்த 3 வயது முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் வரை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியை நேரிலோ அல்லது 0421-2971198 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments